Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இன்னும் சிறிது நாட்களில் திண்டுக்கல்-சென்னை ரயில் இயக்கப்படும்…. அறிவித்த ரயில்வே வாரிய பயணிகளின் வசதிகள் மேம்பாட்டு குழு உறுப்பினர்….!!!!

ரயில்வே வாரிய பயணிகளின் வசதிகள் மேம்பாட்டுக்குழு உறுப்பினர் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தை இந்திய ரயில்வே வாரிய பயணிகளின் வசதிகள் மேம்பாட்டுக் குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். இதில் ரயில் நிலைய மேலாளர் கோவிந்தராஜ், என்ஜினியர் செந்தில்குமார், வணிகப்பிரிவு ஆய்வாளர் சிவபெருமாள், சுகாதார ஆய்வாளர் சதீஷ், தெற்கு ரயில்வே பயணிகள் ஆலோசனை குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன், செல்வ கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதன்பின்னர் இந்திய ரயில்வே வாரிய பயணிகளின் வசதி மேம்பாட்டு குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் ரயில் நிலையத்தில் அமைந்துள்ள நடைமேடை, குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் போதிய அளவில் உள்ளதா? என்று ஆய்வு செய்துள்ளார். மேலும் இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அடிப்படை வசதிகள் குறித்து ரயில் நிலையத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் ஒரு சில குறைபாடுகள் இருக்கிறது.  அவை அனைத்தும் சிறிது நாட்களில் சரி செய்யப்படும். மேலும் அனைத்து தரப்பினரின் கோரிக்கையை ஏற்று திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு புதிய ரயில்  இயக்கப்படுகிறது. இதனையடுத்து  புதிதாக கட்டப்பட்டுள்ள கழிவறை இன்னும் சிறிது நாட்களில் திறக்கப்படும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்

Categories

Tech |