Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#TeamIndia: 10 ஓவருக்கு 86ரன்…! அதிரடி காட்டுவாரா ? பாண்டியா, SKY …!!

இந்தியா – இங்கிலாந்து இடையான 2ஆவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று  ரோஸ் பவுல் மைதானத்தில் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் பர்மிங்காமில் நடைபெறுகின்றது. கடந்த போட்டியில் இந்திய அணி 50ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை போன்று இந்த போட்டியையும் வென்று தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணியும், முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என இங்கிலாந்தும் இருப்பதால் இந்த போட்டி பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், ரிஷப் பந்த்தும் களமிறங்கினார்.கேப்டன் ரோஹித் 31 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்த வந்த விராட் கோலி  1 ரன்னில் ஆட்டமிழந்து நடையை கட்ட, அடுத்த பந்திலே ரிஷப் பந்த் 26 ரன்னில் ஆட்டமிழந்து, ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். தற்போதைய நிலையில் இந்திய அணி 10 ஓவர்களில் 3விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. சூரியகுமார் யாதவ் – 15* , ஹர்டிக் பாண்டியா – 9* ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

ஸ்கோர் விவரம்:

Categories

Tech |