சிறுவன் திடீரென மயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அக்கராயாப்பாளையம் பொட்டியம் சாலை பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பர்வேஷ்(8), தருண் ஆதித்யா(4) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன் தூங்கிக் கொண்டிருந்த லோகநாதன் திடீரென எழுந்து பார்த்துள்ளார். அப்போது தருண் ஆதித்யா காணாமல் போனதை கண்டு லோகநாதன் அதிர்ச்சி அடைந்தார்.
இதனை அடுத்து குடும்பத்தினர் சிறுவனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து லோகநாதன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுவன் எங்கு சென்றான்? அவனை யாரேனும் கடத்தி சென்றார்களா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி