Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தொழிலாளர்கள்…. ஓட ஓட விரட்டிய கரடி…. வனத்துறையினரின் கண்காணிப்பு…!!

கரடி தொழிலாளர்களை விரட்டிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குண்டூர் காலனி மற்றும் வள்ளுவர் காலனி ஆகிய பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் குண்டூர் காலனியில் வசிக்கும் சில தொழிலாளர்கள் வேலைக்கு நடந்து சென்றனர். அப்போது புதர் மறைவில் இருந்து வந்த கரடி பொதுமக்களை விரட்டி சென்றது. இதனால் அவர்கள் அங்கிருந்து அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சாலையோரம் நின்ற கரடியை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இதனை அடுத்து சாலையோரம் வளர்ந்திருந்த செடிகளை ஊராட்சி நிர்வாகத்தினர் வெட்டி அகற்றினர். அங்கு மீண்டும் கரடி வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |