Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில்13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த செங்கல் காட்சிக்கு வைப்பு”….!!!!

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியத்தில் பதிமூன்றாம் நூற்றாண்டு சேர்ந்த செங்கல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் 13ஆம் நூற்றாண்டு செங்கல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த செங்கலானது சிகரமானபள்ளி காட்டு பகுதியில் இடிந்த நிலையில் உள்ள கோவிலை ஆய்வு செய்த பொழுது கண்டுபிடிக்கப்பட்டதாகும். இந்த நிலையில் தற்பொழுது பொதுமக்கள் பார்வைக்காக அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

இதுபற்றி அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியுள்ளதாவது, “விஜயநகர காலத்தில் பெரிய கற்களை கொண்டு கோட்டைகள் கட்டும் பொழுது அவற்றின் மேல் பகுதியில் வைத்து கட்டி முடிக்க பல்வேறு அளவுகளில் செங்கற்களை உருவாக்கி இருக்கின்றார்கள். இதன் சுற்றுப்புறத்தில் எங்கேயும் இத்தகைய கோட்டை இருந்து அது இடிந்து அதன் செங்களைக் கொண்டு வந்து பயன்படுத்தி இருக்க வேண்டும். அந்த காட்டுப்பகுதியில் ஓரிடத்தில் பாறையில் சிறு உரல் போன்ற குழிகளும் கற்திட்டையும் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த நடுகளும் 13-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டும் இடிந்த கோவிலும் காணப்படுகின்றதால் இந்த செங்கலின்  காலத்தை கணிப்பதற்கு ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது” என கூறியுள்ளார்.

Categories

Tech |