Categories
சினிமா தமிழ் சினிமா

“தனக்கு பிடித்தவற்றை லிஸ்ட் போட்டு சொன்ன பிரியா பவானி சங்கர்”…. வியப்பில் ரசிகர்கள்….!!!!!

தனக்கு பிடித்தவற்றை லிஸ்ட் போட்டு கூறியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிககையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார் பிரியா பவானி சங்கர். இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக தொடங்கி பின் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். இவரின் நடிப்பு திறமையை பார்த்து இயக்குனர்கள் வெள்ளி திரையில் அறிமுகப்படுத்தினார்கள். இவர் மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

இதையடுத்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம், ஓ மணப்பெண்ணே, ஹாஸ்டல், யானை என தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான யானை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர் தனக்கு பிடித்த விஷயங்களை மனம் திறந்து கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, பிடித்த நடிகர் மாதவன், பிடித்த லவ் ப்ரோபோசல் சீன் காக்க காக்க, பிடித்த ஹீரோயின் பார்வதி, பிடித்த உணவு பிரியாணி, பிடிச்ச டெஸ்டினேஷன் கிரீஸ், ஆல் டைம் ஃபேவரைட் மூவி முகவரி, பிடித்த வசனம் ஆறுச்சாமி, பிடித்த இயக்குனர் வெற்றிமாறன், பிடித்த நிறம் கருப்பு, பிடித்த காமெடி நடிகர் வடிவேலு, பிடித்த இடம் சென்னையில் என் வீடு, பிடித்த வில்லன் அருண் விஜய், பிடித்த உடை ட்ராக்ஸ் அண்ட் டி-ஷர்ட் என மனம் திறந்து கூறியுள்ளார்.

Categories

Tech |