Categories
கிரிக்கெட் விளையாட்டு

#NZvInd : இந்தியா முதல் பேட்டிங்…!!

இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூஸி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

3 விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்க நியூஸிலாந்து நாட்டிற்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதல் கட்டமாக 5 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் அடுத்ததாக இரு அணிகளும் ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது.

3 போட்டிகளை கொண்ட இந்த ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் இன்று சீட்டோன் பார்க், ஹாமில்டன் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

Categories

Tech |