இஸ்ரோ அமைப்பின் தலைவர் ஆன டாக்டர் சோம்நாத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அரசு விண்வெளி துறையை மேலும் சீர்படுத்த விரும்புகிறது. இதயடுத்து விண்வெளி கொள்கை 2022 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கையின் படி இனி தனியார் அமைப்புகளும் செயற்கைக்கோள்களுக்கு உரிமையாளராகலாம். அவற்றை இயக்கலாம். இதற்கு முன்னதாக இஸ்ரோ மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் மட்டுமே செயற்கைக்கோள்களை இயக்க முடியும் என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த மாத இறுதிக்குள் அல்லது ஆகஸ்ட் தொடக்கத்தில் சிறிய செயற்கைக்கோள்களை ஏவும் ராக்கெட் விண்வெளிக்கு அனுப்பி பரிசோதனை செய்யப்படும். இதேபோன்று தனியார் அமைப்புகளும் ராக்கெட்டுகளை இயக்கலாம். அதுமட்டுமின்றி ராக்கெட் ஏவுதளத்தையும் அவர்களே உருவாக்கி அந்த ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்ப செய்யலாம். விண்வெளி துறையில் புதிய தளங்களை உருவாக்க வேண்டும் என்பதை எங்களுடைய இலக்கு என்று தெரிவித்துள்ளார்.