Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் பரவும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல்…. 8 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!

அசாம் மாநிலத்தில் ஒவ்வொரு வருடமும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் மலேரியா பரவி பலரது உயிரையும் பறித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மழைக்கால வெள்ளப் பருவத்தில் வேகமாக பரவக்கூடிய இந்த காய்ச்சல் மே மாதத்தில் தொடங்கி அக்டோபர் மாதம் வரை நீடிக்கும். அசாம் மாநிலத்தில் ஏற்கனவே கடந்த 9 நாட்களில் மட்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானிய மூளை காய்ச்சலால் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார இயக்ககம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் காரணமாக 40 இறப்புகள் பதிவாகியது. இந்நிலையில் மாவட்ட விரைவு பதில் குழுக்களை அமைக்கவும் நிலைமையை உன்னிப்பாக கவனிக்கவும் சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Categories

Tech |