Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மின் கம்பியாள் உதவியாளர் பணி…. ஜூலை 26 வரை விண்ணப்பிக்கலாம்….. வெளியான அறிவிப்பு…!!!!

தர்மபுரி அரசினர் தொழிற்கல்வி நிலையத்தில் மின் கம்பியாள் உதவியாளர் பணிக்கு தகுதி காண் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தர்மபுரி மாவட்டம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் கடகத்தூர் மின் கம்பியால் உதவியாளர் தகுதிக்கான தேர்வுக்கு விண்ணப்பங்கள் ஜூலை 26 ஆம் தேதி வரை வரவேற்கப்படுகிறது. 21 வயது நிரம்பியவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர் மின் வயரிங் தொழிலில் ஐந்து வருடங்களுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். தொடர்ச்சியாக இல்லாமல் விட்டு விட்டு பணிபுரிந்தவராக இருந்தாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான சான்றிதழை அலுவலக முத்திரையுடன் கொடுக்க வேண்டும். மேலும் இந்த துறையால் நடத்தப்பட்ட தொழிலாளர்களுக்கான மாலை நேர வகுப்பில் கம்பியாளராக பயின்று தேர்ச்சி பெற்றவர்களும் உரிய சான்றுடன் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு கட்டணம் 200 ரூபாய் செலுத்த வேண்டும். கீழ்க்கண்ட கணக்குத் தலைப்பில் கருவூலத்தில் செலுத்தி அதற்கான செலுத்துச் சீட்டினை அசலாக விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். “0230-00-Labour and Employment – 800 – Other Receipt – AC Craftsman Training Scheme – 27 – Non-Taxation Fees – 13 – Examination (DPC 0230-800-AC-2713). New IFHRMS Code : (DPC 0230-00-800-AC-22713)” கட்டணம் செலுத்துவதற்கான இணையதள முகவரி: https://www.karuvoolam.tn.gov.in/challan/echallan .

மேலும் இது தொடர்பான விபரங்களுக்கு முதல்வர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் தருமபுரி அவர்களை நேரில் அனுகலாம் அல்லது தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்.9443458711. இத்தேர்விற்குரிய விண்ணப்பப் படிவம் மற்றும் குறிப்பேட்டினை விண்ணப்பிக்க விரும்புவோர்  https//skiltraining.tn.gov.in/DET மூலம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.

Categories

Tech |