Categories
தேசிய செய்திகள்

#BREAKING: நீட் தேர்வு…. நாளை(ஜூலை 11) முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம்…. வெளியான அறிவிப்பு….!!!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் வருகின்ற ஜூலை 17ஆம் தேதி நேரடி முறையில் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் நீட் தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ள விவரம் குறித்து அறிவிப்பு வெளியாகியது. அதனை மாணவர்கள் https://neet.nta.in/ என்ற இணையதளத்தில் மையங்களை அறிந்து கொள்ளலாம். மேலும் கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மாணவர்களுக்கு சந்தேகம் ஏதாவது இருக்கும் பட்சத்தில் 011-40759000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் நாளை முதல் தேர்வு கூட நுழையவீச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |