Categories
உலக செய்திகள்

இலங்கையில் வெடித்த போராட்டம்!…. பதவியை ராஜினாமா செய்த 2 மந்திரிகள்…. வெளியான தகவல்….!!!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் இலங்கை மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்து இருக்கிறது. அதன்படி இன்று இலங்கையில் அதிபர் மாளிகையை நோக்கிவந்த போராட்டக்காரர்கள் மாளிகையை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் காரணமாக அதிபர் மாளிகையைவிட்டு கோத்தபய ராஜபக்சே வெளியேறினார். கொழும்பில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவிவிலக வேண்டும் என அனைத்துக்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து அவர்களின் கோரிக்கையை ஏற்று என் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இலங்கைநாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே வருகிற 13-ஆம் தேதி தன் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தகவல் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்கே அமைச்சரவையில் மந்திரியாகயிருந்த ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கரா போன்றோர் தங்களது பதவியை ராஜினாமா செய்து உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |