எடப்பாடி பழனிச்சாமியின் அடுத்த அடுத்த மூவ்களால் ஓ.பி.எஸ் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்.
அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமியும், ஓ. பன்னீர்செல்வம் ஆளுக்கு ஒரு பக்கமாக கட்சியை தன்வசப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த கட்சியின் பொது குழுவில் உள்ள 2665 உறுப்பினர்களின் பெரும்பாலானோர் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பொதுக்குழு கூட்டத்தின் போது கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பெரும் ஆதரவுடன் பதவி ஏற்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆனால் பொதுக்குழு கூட்டத்தை தடுக்க வேண்டும் என்பதற்காக ஓ.பி.எஸ் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார்.
இந்நிலையில் ஓ. பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் 62 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் 42 பேர் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து மீதமுள்ள உறுப்பினர்களையும் எடப்பாடி பழனிச்சாமியின் பக்கம் இழுப்பதற்கான நடவடிக்கைகளில் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக கட்சியின் தலைமை பொறுப்பு ஓ பன்னீர்செல்வத்தின் கையில் இருந்து நழுவி போவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கிறது. இதனால் ஓ.பி.எஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் பெரும் கலக்கத்தில் இருக்கின்றனர்.