அமெரிக்க நாட்டின் வாஷிங்டன் நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு கருத்தடை சட்டத்தை எதிர்த்து பேரணி நடத்தியுள்ளனர்.
அமெரிக்க நாட்டில் கடந்த 1973 ஆம் வருடத்தில் உச்ச நீதிமன்றம் கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட உரிமை, என்று தீர்ப்பளித்தது. இதேபோன்று கடந்த 1992 ஆம் வருடத்தில் இதே வழக்கில் ஒரு பெண் 22-லிருந்து 24 வாரங்களில் கர்ப்பத்தை கலைத்துக்கொள்ள சட்டபூர்வமாக அனுமதி உண்டு என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில் 15 வாரங்கள் ஆனப்பின் கருவை கலைக்க தடை விதித்து மிசிசிப்பி மாகாணம் சட்டம் கொண்டு வந்தது. அந்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கிற்க்கான தீர்ப்பு கடந்த 24ஆம் தேதி அன்று வழங்கப்பட்டது.
அதில் பெண்களின் கருக்கலைப்பு தனிப்பட்ட சட்டம் என்ற உரிமை அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. இதனால் 50 வருடங்களாக இருந்த உரிமை சட்டம் நீக்கப்படுவதா ? என்று கொந்தளித்த பெண்கள் அதனை எதிர்த்து அமெரிக்க நாட்டின் பல மாகாணங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். வாஷிங்டனில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து கருக்கலைப்பு தடை சட்டத்தை எதிர்த்து பேரணி நடத்தியுள்ளனர்.