Categories
தேசிய செய்திகள்

அடிதூள்…! வெறும் ரூ.26 க்கு விமான டிக்கெட்….. ஜூலை 13 வரை மட்டுமே….. உடனே புக் பண்ணுங்க….!!!!

வெறும் 26 ரூபாயில் இந்தியாவிலிருந்து வியட்நாம் நாட்டிற்கும், வியட்நாமில் இருந்து இந்தியாவுக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வியட்ஜெட் விமான நிறுவனம் இந்த சலுகையை விமான பயணிகளுக்காக ஒரு வாரம் மட்டும் வழங்குகிறது. ஜூலை மாதத்தில் இரட்டை 7/7 நாளை முன்னிட்டு, வியட்ஜெட் ஒரு வார கால டிக்கெட் தள்ளுபடியை 777,777 விமான பயணிகளுக்கு வெறும் ரூ. 26 கட்டணம் மட்டுமே வசூலிக்க உள்ளது.

இந்த சிறப்பு டிக்கெட்டுகள் வியட்ஜெட் நிறுவனத்தால் இயக்கப்படும் அனைத்து உள்நாட்டு விமானங்கள் மற்றும் அனைத்து சர்வதேச வழிகளிலும் முன்பதிவு செய்ய செல்லுபடியாகும். ஜூலை 7 முதல் ஜூலை 13 வரை இந்த சிறப்பு கட்டண டிக்கெட்டுக்களை பெற்று கொள்ளலாம். பயணத்திற்கான கால அளவு ஆகஸ்ட் 15, 2022 முதல் மார்ச் 26, 2023 வரை ஆகும்.

இந்த சிறப்பு டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்ய வியட்ஜெட் விமான நிறுவனத்தின் இணையதளமான www.vietjetair.com என்ற இணையதளத்திற்கு சென்று வாடிக்கையாளர்கள் பெற்று கொள்ளலாம். மேலும் வியட்ஜெட் ஏர் என்ற மொபைல் செயலி மூலம் இந்த சிறப்பு டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Categories

Tech |