வடசென்னை பகுதியில் ஒரு வாரமாக விஷவாயு காற்றில் பரவி வருகிறது. இதன் விளைவாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வாந்தி, மயக்கம், மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். குறிப்பாக எண்ணூர், திருவெற்றியூர், தண்டையார்பேட்டை, மணலி உள்ளிட்ட பகுதிகளில் சல்பர் டை ஆக்சைடு என்ற விஷ வாயுவால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இது அந்த பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலைகளில் இருந்து தான் பரவுவதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.
Categories