Categories
தேசிய செய்திகள்

குருமூர்த்தி மீது மேல் நடவடிக்கை… மத்திய நிதி இணையமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்…!!!

துக்ளக் இதழின் ஆண்டு விழா ஆண்டுதோறும் ஜனவரி 4 ஆம் தேதி நடப்பது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது .அதன் பிறகு கடந்த மே 8 ஆம் தேதி சென்னை மியூசிக் அகாடமில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பை விருந்தினராக கலந்து கொண்டார். துக்ளக் இதழின் 52 வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் துவக்க உரையாற்றிய ஆடிட்டர் குருமூர்த்தி, பிரதமர் மோடி, பாஜக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரை புகழ்ந்து பாராட்டி பேசினார். அதுமட்டுமில்லாமல் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் மற்றும் சில கட்சிகளை விமர்சித்தும் பேசினார். அப்போது பேசிய குருமூர்த்தி, அரசாங்க வங்கிகளில் பணியாற்றியவர்கள் கழிசடைகள் என்று கூறினார். அதை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டபடி அமர்ந்திருந்தார். அதன் பிறகு அது குறித்து அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் குருமூர்த்தியின் இந்த பேச்சுக்கு மதுரை எம்.பி, சு.வெங்கடேசன், விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார், வங்கி பணியாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தனர். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் துக்ளக் விழாவில் வங்கி ஊழியர்களைகழிசடை என்று கூறிய குருமூர்த்தியை கண்டிக்கச் சொல்லி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், குருமூர்த்தியின் பேச்சால் லட்சக்கணக்கா வங்கி ஊழியர்கள் மிகுந்த மன காயத்திற்கு ஆளாகி உள்ளனர். தொழிலாளர்களின் கௌரவத்தை பாதிக்கிற வகையில் பொறுப்பேற்ற பேச்சுக்களை பொது நிகழ்ச்சியில் பேசக்கூடாது என்று அறிவுறுத்தவும், குருமூர்த்தியின் “கழிசடை” எனும் கூற்று நிதி அமைச்சர் கண்டிப்பார் என்று நம்புவதாக தெரிவித்தார். இந்த கடிதத்திற்கு பதில் அளித்த நிதி அமைச்சர் பகவத் காரத் இப்பிரச்சினை தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் வரம்பு எல்லைக்கு இருப்பதால் பொருத்தமான மேல் நடவடிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக பதில் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

Categories

Tech |