Categories
மாநில செய்திகள்

அ.தி.மு.க முக்கிய புள்ளிகளுக்கு எழுந்த சிக்கல்…. கோவை முன்னாள் அமைச்சரின் வீட்டில் திடீர் ரெய்டு….!!!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக அரசியலில் அ.தி.மு.க கட்சியால் நாள்தோறும் ஒரு பரபரப்பான சம்பவம் நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது அ.தி.மு.க கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களை குறிவைத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் காமராஜர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து தற்போது அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் உதவியாளர் சந்தோஷ் மற்றும் அவரது சகோதரர் வசந்தகுமார் வீட்டில் நேற்று இரவு முதல் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |