திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை நகராட்சி ஆரம்பிக்கப்பட்ட 103 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு நகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கு நூற்றாண்டு விழா வளர்ச்சி பணிகள் சிறப்பு திட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் படி தங்கம்மாள் ஓடை மற்றும் கழுத்தறுத்தான் பள்ளம் தூர்வாருதல், பழைய வி.பி.புரம் காலி இடத்தில் கூடுதல் பஸ் நிலையம் கட்டுதல், முக்கிய சாலைகளில் புதிய மின்விளக்கு அமைத்தல், வார சந்தையை மேம்படுத்தல், 5 பூங்காவை மேம்படுத்துதல் ஆகிய பணியிகளுக்கு மொத்தம் ரூ.48 கோடியே 84 லட்சத்து நிதி கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒதுக்கப்பட்டது. இதில் உடுமலை ராஜேந்திரன் சாலையில் உள்ள நகராட்சி வாரச்சந்தை மேம்படுத்துவதற்காக பணிகளை மேற்கொள்ள ரூ.6 கோடி 84 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வார சந்தை ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை நாட்களில் கூடும். இந்த வார சந்தை வளாகத்தின் ஒரு பகுதியில் தினசரி காய்கறிசந்தையும், காய்கறி கமிஷன் மண்டிகளும் உள்ளது.
இந்த காய்கறி கமிஷன் மண்டிகளுக்கு தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள் வந்து செல்லும். அதே நேரத்தில் திங்கட்கிழமை தோறும் கூடுகின்ற வாரச்சந்தை வளாகத்தில் கடைகள் பழுதடைந்து, பராமரிப்பு இல்லாமல் பயனற்று இருக்கின்றது. இந்நிலையில் நகராட்சி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த வார சந்தையை மேம்படுத்துவதற்காக பணிகள் கடந்த 4 மாதங்களுடன் தொடங்கப்பட்டது. ஆனால் கடைகளை கட்டுவதற்கான கான்கிரீட் தூண்களை அமைப்பதற்கான பல மெகா அளவிலான குழிகள் தோண்டப்பட்டதுடன் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உடுமலை நகராட்சிக்கு கடந்த மே மாதம் வந்திருந்த நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னியன் நூற்றாண்டு விழா நினைவு வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்ட ஆய்வு மேற்கொண்டார். அப்போது இந்த நகராட்சி வார சந்தைக்குள் கடைகள் கட்டுவதற்கு பணிகள் தொடங்கப்பட்டதுடன், அப்படியே நின்றுவிட்ட நிலையே பார்வையிட்ட அவர், அது குறித்து அதிகாரியிடம் கேட்டறிந்தார். அத்துடன் பணிகளை விரைவில் செய்து முடிக்க வேண்டும் என்று நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார்.