Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“போதை பொருள் விழிப்புணர்ச்சி”…. “எதிர்கால இந்தியாவை நிர்ணயிப்பவர்கள் மாணவர்கள்”….. துணை கமிஷனர் அதிரடி பேச்சு….!!!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையே போதை பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க கூடிய வகையில் பள்ளி, கல்லூரிகள் அருகில் பீடி, சிகரெட் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பாபு உத்தரவின்படி பள்ளி, கல்லூரிகள் அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் மாணவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருப்பூர் அங்கேரிபாளத்தை அடுத்த வி.கே. அரசு மேல்நிலை பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை அனுப்பர்பாளையம் போலீஸ் சரக உதவி கமிஷனர் நல்ல சிவம் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் அபிநவ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் பிறகு பேசி அவர், மாணவ-மாணவிகளான இன்றைய இளைய தலைமுறையினரே நாளைய எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடியவர்கள். அத்தகைய மாணவர்கள் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும். இப்போதைக்கு அடிமை ஆகாமல், அதிலிருந்து வெளிவர வேண்டும். பெற்றோர்கள் கஷ்டப்பட்டு பிள்ளைகளை படிக்க வைக்கின்றன. அதனை நினைத்து படித்து எதிர்கால இந்தியாவை சிறப்பாக மாற்ற வேண்டும் என்று கூறினார்.

Categories

Tech |