உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் சென்ற பிப்ரவரி 24ம் தேதி முதல் இப்போது வரை இடைவிடாமல் நடந்து வருகிறது. இருதரப்பிலும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு உக்ரைன் இராணுவமும் ஈடுகொடுத்து வருகிறது. இதற்கிடையில் உக்ரைனின் தெற்கு பகுதியிலுள்ள ஏராளமான நகரங்களை ரஷ்யராணுவம் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. இப்போது கிழக்கு உக்ரைனில் கடும் போர் நடைபெற்று வருகிறது. சென்ற வாரம் லிசிசான்ஸ்க் நகரத்தை ரஷ்யபடை கைப்பற்றியது.
அத்துடன் ரஷ்ய ராணுவம் தன் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் கிழக்கு உக்ரைனிலுள்ள சாசிவ்யார் எனும் நகரத்தில் ரஷ்யபடைகள் நேற்று நடத்திய ஏவுகனை தாக்குதலில் 5 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று பலத்த சேதமடைந்தது. இத்தாக்குதலால் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி 10 பேர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி 30க்கும் அதிகமானோர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவர்களை மீட்கும் பணியில் உக்ரைன் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.