Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய பசுமாடு…. தீயணைப்பு வீரர்களின் செயல்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

கிணற்றில் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கணக்குபிள்ளையூர் பகுதியில் விவசாயியான ராமன்(45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் பசுமாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தோட்டத்தில் இருந்து 50 அடி ஆழ கிணற்றில் பசு மாடு எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தது.

இதனை பார்த்த ராமன் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிறு கட்டி பசுமாட்டை பத்திரமாக மீட்டனர்.

Categories

Tech |