ஆம்புலன்ஸில் செல்லும் பொழுதே பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு தாலுகா உட்பட்ட பிஞ்சமந்தை கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் என்பவரின் மனைவி ரோஜா. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தொடர்பு கொண்டு உள்ளனர்.
இதையடுத்து விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் அவரை ஏற்றுக் கொண்டு வேப்பங்குப்பம் அரசு மருத்துவமனையை நோக்கி சென்ற பொழுது, செல்லும் வழியிலேயே அவருக்கு பிரசவ வலி மிகவும் அதிகமானது. இதனால் ரோஜாவிற்கு ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளர் ஜெயலஷ்மி பிரசவம் பார்த்ததில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்த.து இதையடுத்து தாயையும் குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.