Categories
தேசிய செய்திகள்

ALERT: இங்கு அடுத்த 5 நாட்களுக்கு…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

மேற்குதிசை காற்று வேக மாறுபாட்டின் காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான மழை மற்றும் பல்வேறு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய பலத்த மழையும் பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரையிலும் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அவ்வப்போது சில இடங்களில் லேசான மழை பொழிவு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. கடலோர பகுதிகளை பொறுத்தவரையிலும் 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுவீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க போக வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அடுத்த 3 தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி கர்நாடக மாநிலத்தில் சென்ற சில நாட்களாகவே அதிகமான மழைபெய்து வரும் காரணத்தால் அங்குள்ள பகுதிகள் முழுவதும் மழைநீர் வெள்ளப்பெருக்கு போல கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அங்குள்ள பகுதி முழுவதும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்திலுள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கர்நாடக மாநிலத்திலுள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதால் விளைநிலங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதற்கிடையே கர்நாடக மாநிலத்திலுள்ள உடுப்பி, குடகு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு ரெட்அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |