அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி, அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு போன்ற பல்வேறு பிரச்சனைகளால் அதிபர் கோத்தப்பய ராஜபக்சேவை பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு நேற்று அங்கேயே இரவு தங்கி இருந்தனர். இந்நிலையில் அதிபர் மாளிகையில் இருக்கும் போராட்டக்காரர்கள் நீச்சல் குளத்தில் குளிப்பது, தரையில் சொகுசாக படுத்துக்கொண்டு டிவி பார்ப்பது போன்று மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
இதனையடுத்து சிலர் அதிபர் மாளிகையை சுற்றி பார்த்த போது சில ரகசிய அறைகளும் சுரங்கப்பாதைகளும் இருப்பது தெரியவந்தது. அந்த ரகசிய அறைகளை உடைத்து பார்த்த போது அதில் ஏராளமான நகைகளும், பணமும் இருந்தது. அந்த பணம் மற்றும் நகைகளை போராட்டக்காரர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக அந்நாட்டின் பிரபல பத்திரிகை நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.