ஆட்டுப்பட்டியில் இருந்த 15 ஆடுகள் மர்ம விலங்குகள் கடித்து உயிரிழந்துள்ளது.
திருவண்ணாமலையில் மாவட்டத்தில் உள்ள வேட்டவலத்தை அடுத்து இருக்கும் காட்டேரி ஊராட்சியை சேர்ந்தவர்கள் கண்ணன் மற்றும் முனுசாமி. இவர்கள் 130 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை ஆட்டுப்பட்டி அமைத்து வளர்த்து வருகின்ற நிலையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் ஆட்டுப்பட்டியில் இருந்து ஆடுகள் அலறும் சத்தம் கேட்டதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது முனுசாமியின் பட்டியலில் இருந்த பத்து ஆடுகளும் கண்ணன் பட்டியலில் இருந்த ஐந்து ஆடுகளும் குடல் சரிந்த நிலையில் படுங்காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளது.
இதை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர்கள் ராஜேஸ்வரி மற்றும் ராஜ்குமார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டதில் ஆடுகளை மர்ம விலங்கு ஏதேனும் கடித்து உயிரிழந்திருக்கலாம் என கூறினார்கள்.