வித்திஷ்ரம் சி.பி.எஸ். இ பள்ளியில் இலக்கிய மன்றம் தொடக்க விழா நடைபெற்றுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் வித்யாஷ்ரம் என்ற சி. பி.எஸ். இ. பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நேற்று இலக்கிய மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் பள்ளி முதல்வர் விஜயகுமார், அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் ராஜசேகர், ஜான்சி ராணி, மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு 1 நிமிடத்தில் 50 திருக்குறளை ஒப்புவித்து உலக சாதனை படைத்த பிரசாத் என்ற மாணவனை பாராட்டி பரிசுகளை வழங்கியுள்ளனர். அதன் பின்னர் தமிழ் கவிதைகள், தமிழ் மொழியின் தொன்மை, மேன்மை குறித்து உரையாடல்கள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது.