Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கண்களை கவரும் வகையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி…. அலைமோதும் மக்கள் கூட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

நடைபெறும் கலை விழாவை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசிக்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வ. உ. சி. மைதானத்தில் வைத்து  ஸ்பிக்  நிறுவனம் சார்பில் பாரம்பரிய கலை விழா நடைபெறுகிறது. இந்த விழாவின் 3-வது நாளான நேற்று மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் எம்.பி ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

அதன் பின்னர்  விழாவில் வில்லுப்பாட்டு, பாறையாட்டம், சிலம்பாட்டம், துடும்பாட்டம், கரகாட்டம், இசை கச்சேரி, தெருக்கூத்து, குச்சி ஆட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. மேலும்  கண்களை  கவரும் வகையில்  வண்ண  நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதனை ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் கண்டு ரசித்துள்ளனர்.

Categories

Tech |