இலங்கையில் நேற்று மக்கள் போராட்டம் தீவிரமடைந்தது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் எனக் கூறி ஆயிரக்கணக்கான மக்கள் கொழும்பில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். தடுப்புகளை உடைத்துக் கொண்டு போராட்டக்காரர்கள் மாளிகைக்குள் நுழைந்தனர். வீட்டை ஆக்கிரமித்த போராட்டக்காரர்கள் அங்குள்ள நீச்சல் குளங்களில் குளிக்கும் காட்சிகள், ஏராளமானோர் வீட்டில் இருக்கும் காட்சிகளும் வெளியானது.
அதிபர் மாளிகையில் உள்ள பதுங்கு குழியிலிருந்து போராட்டக்காரர்கள் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுத்துள்ளனர். இதன் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ரூபாய் நோட்டுகளை போராட்டக்காரர்கள் எண்ணும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இளைஞர் ஒருவர் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் இன்ஸ்டாகிராமில், சார் வீட்டில சின்னப் பின் சார்ஜர் ஒன்னு இல்லையா? என்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக கோத்தபய தரப்பிலிருந்து முழு விவரம் கேட்டு பதில் வந்ததும் இப்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை வைத்து நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களையும், மீம்ஸ் கிரியேட்டர்கள் இதுகுறித்து மீம்ஸ்களை போட்டும் இணையத்தை தெறிக்க விட்டு வருகின்றனர்.