மாணவர் ஒருவர் கல்லூரியில் தேங்காய், பூசணிக்காய் உடைத்து ஆரத்தி எடுத்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூரில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் கீழ பெரும்பாக்கத்தில் இருக்கும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 4-ஆம் தேதி இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கான கடைசி தேர்வு நடந்தது. இந்நிலையில் கடைசி தேர்வை எழுத சொல்லும்போது பிரசாந்த் கல்லூரி வாயிலில் வைத்து தேங்காயில் கற்பூர ஆரத்தி எடுத்துள்ளார்.
இதனை அடுத்து தேர்வு எழுதி முடித்து வெளியே வந்த பிரசாந்த் இறுதியாண்டு முடிவடைந்ததால் பூசணிக்காய் ஆரத்தி எடுத்து உடைத்தார். இந்த செயலை சக மாணவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இறுதி ஆண்டினை முடித்து கல்லூரிக்கு நன்றி செலுத்தும் விதமாக பிரசாந்த் ஆரத்தி எடுத்த சம்பவம் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.