Categories
கிரிக்கெட் விளையாட்டு

”கிங் கோலி , ஸ்ரேயாஸ் ஐயர் அபாரம்” இந்தியா அதிரடி ரன் குவிப்பு …!!

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி , ஸ்ரேயாஸ் ஐயர் அரை சதம் அடித்து அசத்தியுள்ளனர்.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடருக்குப் பின், ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று ஹாமில்டனில் தொடங்கியுள்ளது.இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லாதம் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளதால், இந்திய அணிக்கு புதிய தொடக்க ஜோடியாக ப்ரித்வி ஷா – மயாங்க் அகர்வால் இணை களமிறங்கவுள்ளது. நீண்ட நாள்களாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்த ஜாதவ் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.

ப்ரித்வி ஷா

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயாங்க் அகர்வால் – ப்ரித்வி ஷா களமிறங்கினர். முதல் ஓவரை டிம் சௌதீ வீசி மெய்டன் செய்து அசத்தினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஜோடி 50 ரன்னில் விழுந்தது. ப்ரித்வி ஷா 20 ரன் எடுத்த நிலையில் கிராண்ட்ஹோம் பந்தில் ஆட்டமிழக்க அணியில் ஸ்கோர் 54 வந்த போது மயாங்க் அகர்வாலும் பெவிலியன் திரும்பினார்.

Image

32 ரன்கள் அடித்த மயாங்க் அகர்வால் சௌதீ பந்தில் ஆட்டமிழக்க விராத் கோலி – ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி நியூசிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது. இந்த ஜோடி 3ஆவது விக்கெட்டுக்கு 102 ரன்கள் குவித்து அசத்தியது. வழக்கமான ஆட்டத்தை வெளியப்படுத்திய கோலி 51 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

Image

பின்னர் களமிறங்கிய லோகேஷ் ராகுல் ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்து ஆடி வருகின்றார். இந்திய அணி  35 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 199 ரன் எடுத்து ஆடி வருகின்றது. அசத்தலான ஆட்டத்தை வெளிபடுத்ய ஸ்ரேயாஸ் ஐயர் 59 ரன்னுடனும் , லோகேஷ் ராகுல் 29 ரன்னுடனும் ஆடி வருகின்றனர். நியூசிலாந்து அணி சார்பில் இஷ் சோதி , கிராண்ட்ஹோம், டிம் சவுதி ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

Categories

Tech |