தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து பள்ளிகளும் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது விடுமுறையை தவிர திருவிழாக்கள் நடைபெறும் காலங்களில் அந்தந்த மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர்,காந்திமதி அம்மன் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று ( ஜூலை 11ஆம் தேதி) நடைபெற உள்ளது. அதனால் இன்று நெல்லை மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகள் மற்றும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நாளின் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜூலை 23ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.