Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”….. நாடு முழுவதும் இன்று(ஜூலை 11) முதல் மீண்டும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

முன்பதிவில்லா  எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று( ஜூலை  11) முதல்  மீண்டும் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவைகள் அனைத்தும் தற்போது படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், திருப்பதி-காட்பாடி (07581) இடையே காலை 10.55 மணிக்கும் மறுமார்க்கமாக காட்பாடி-திருப்பதி(07582) இடையே இரவு 9.55 மணிக்கும் புறப்படும் முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில் இன்று  முதல்  மீண்டும் இயக்கப்படுகிறது. விழுப்புரம்-மயிலாடுதுறை(06691) இடையே மதியம் 2.25 மணிக்கும் மறுமார்க்கமாக மயிலாடுதுறை-விழுப்புரம்(06690) இடையே காலை 6 மணிக்கும் புறப்படும் முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று  முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.

விழுப்புரம்-புதுச்சேரி(06737,06799) இடையே அதிகாலை 5.30 மணி மற்றும் மாலை 5.50 மணிக்கும் மறுமார்க்கமாக புதுச்சேரி-விழுப்புரம் (06738,06436) இடையே காலை 8.10 மணி மற்றும் இரவு 7.45 மணிக்கும் புறப்படும் மின்சார ரயில்கள் இன்று  முதல் மீண்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Categories

Tech |