தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 5 வரை செஸ் போட்டி நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதில் வெற்றி பெறும் மாணவர்களை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பிக் போட்டிகளை காண அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் செஸ் வீரர்களுடன் மாணவர்கள் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.