Categories
மாநில செய்திகள் வேலூர்

புதிய பாடத்திட்டம்…… “PRACTICAL EXAMS” அப்பப்பா……. இனி DL வாங்குறது ரொம்ப கஷ்டம்டா சாமி….!!

சாலை விபத்துக்களை தடுக்கும் வண்ணம் பல்வேறு சோதனை தேர்வுகளுக்கு பின்னரே வாகன ஓட்டிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என போக்குவரத்து தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.

சாலை விபத்துகளை தவிர்ப்பதற்காக வேலூர் மண்டல அளவில் சாலை பாதுகாப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.  போக்குவரத்து துறை தலைமை செயலாளர் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில்பேசிய அவர், 2016 ஆம் ஆண்டு தமிழகத்தில் தான் அதிக அளவில் சாலை விபத்து நடைபெற்றது. அந்த ஆண்டில் மட்டும் சுமார் 17 ஆயிரம் பேர் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

அதன்பின் காவல் துறை போக்குவரத்துத் துறை  சார்பில் மேற்கொண்ட கடும் நடவடிக்கைகளால் விபத்து எண்ணிக்கை குறைந்து 2018 ஆம்ஆண்டில் உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆயிரமாக குறைந்தது. தமிழக சாலை போக்குவரத்து துறை 2030க்குள் விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆகையால் மேற்கொண்டு கடும் நடவடிக்கைகள் எடுத்தால் தான் இதனை அமல்படுத்த முடியும்.

அதன்படி ஏற்கனவே சிக்னலை மதிக்காமல் சென்றவர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் உட்பட ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இனி வரக்கூடிய காலகட்டங்களில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு சிறப்பு பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும், கடின சோதனை தேர்வுகள் நடைபெறும் அனைத்திலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே வாகனம் உரிமம் வழங்கப்படும்.  இது அனைவருக்கும் பொதுவானது இதில் எந்த மாற்றமும் ஏற்படுத்த முடியாது என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |