பெரும் பரபரப்புக்கு மத்திய அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று ஸ்ரீவாரு மண்டபத்தில் நடக்கவுள்ளது. முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான இபிஎஸ் தன்னுடைய ஆதரவாளர்களோடு புறப்பட்டு சென்றார். தீர்ப்பு தனக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கையில் பொதுக்குழு நடக்கும் இடத்திற்கு இபிஎஸ் புறப்பட்டு செல்கிறார். அதே சமயம் ஓபிஎஸ் தனக்கு எதிராக தீர்ப்பு வந்தால் தமிழகம் முழுவதும் போராட்டத்தை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.
இதனிடையே அதிமுக பொது குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்து வழக்கில் தமிழகமே எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் கட்சி விதிகளின்படி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளது.