Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மர்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. சென்னையில் பரபரப்பு….!!!

திடீரென டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டம் அண்ணா நகரில் உள்ள 2-வது அவென்யூ டவர் பூங்கா மற்றும் ஐயப்பன் கோவில் அருகில் டிரான்ஸ்பார்மர் ஒன்று அமைந்துள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர் திடீரென நேற்று  தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அண்ணாநகர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். அதன்பிறகு உயர் மின்னழுத்தம் காரணமாக டிரான்ஸ்பார்மரில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த தீ விபத்தினால் அப்பகுதி சிறிது நேரம் புகை மண்டலமாக காட்சியளித்தது

Categories

Tech |