Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தாளவாடிக்கு கொண்டுவரப்பட்ட கும்கி யானைகள்…. பார்ப்பதற்காக ஓடோடி வந்த பொதுமக்கள்…..!!!!!

ஈரோடு மாவட்டம் தாளவாடி வனச்சரகத்துக்குட்பட்ட இரிபுரம், தொட்டகாஜனூர், தர்மாபுரம் பகுதியில் வனப் பகுதியிலிருந்து கருப்பன் என்ற காட்டு யானை வெளியேறி மக்களை தாக்கி கொன்றதுடன், விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி அட்டுழியம் செய்து வந்தது. இதையடுத்து அந்த யானையை கட்டுபடுத்த பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பத்திலிருந்து சின்னதம்பி மற்றும் ராஜவர்தன் என்ற 2 கும்கி யானைகள் சென்ற 4 நாட்களுக்கு முன் தாளவாடியை அடுத்த இரிபுரம் பகுதிக்கு கொண்டு வரபட்டது.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கும்கி யானைகளை பார்ப்பதற்காக தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் இரிபுரத்தில் குவிந்தனர். அதன்பின் அவர்கள் 2 கும்கி யானைகளையும் பார்த்து புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த வனத்துறையினர் பொதுமக்கள் யாரையும் கும்கியானைகளின் அருகே அனுமதிக்கவில்லை.

Categories

Tech |