பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் மேற்கொள்வதற்கு உகந்த நேரம் எப்போது என்பதை திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பௌர்ணமி கிரிவலத்திற்கு பிரசித்தி பெற்ற கோவில் என்றால் அது திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் தான். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று இந்த கோவிலில் தமிழகமெங்கும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்ள வருவார்கள். அந்த வகையில்,
இந்த மாதம் வரக்கூடிய சிறப்பு பவுர்ணமி தினத்திற்கு கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது என்பதை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி வருகின்ற சனிக்கிழமை எட்டாம் தேதி நண்பகல் 1.45 மணிக்கு பௌர்ணமி தொடங்கி மறுநாள் நண்பகல் 12.45 வுடன் முடிவடைய உள்ளது. இந்நேரம் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் பக்தர்கள் இந்நேரத்தில் கிரிவலம் மேற்கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.