Categories
சினிமா

அடுக்குமாடி குடியிருப்பு வாங்கிய ரன்வீர் சிங்…. முத்திரை கட்டணம் எவ்வளவு தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!!

இந்தி திரையுலகில் கடந்த 2010 ஆம் வருடம் அறிமுகமான ரன்வீர்சிங், அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தார். இதன் வாயிலாக இவர் பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்தார். இப்போது நடிகர் ரன்வீர்சிங் மும்பையில் ரூபாய் 119 கோடிக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கி இருக்கிறார். இந்த குடியிருப்பானது மும்பை பாந்திரா பகுதியில் பேண்ட்ஸ்டான்டில் இருக்கிறது.

அங்கு கடலை நோக்கி அமைந்து இருக்கும் சாகரஷேம் என்ற சூப்பர் பிரிமீயம் குடியிருப்பின் 16, 17, 18 மற்றும் 19வது தளங்களிலுள்ள குடியிருப்புகளை நடிகர் ரன்வீர்சிங் மொத்தமாக வாங்கி இருக்கிறார். இது 11 ஆயிரத்து 266 சதுரஅடி கார்பெட் ஏரியாவும், 1300 அடி பிரத்தியேக மொட்டைமாடியுடனும் இருக்கிறது. மேலும் 19 கார்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் ஏரியாவையும் வாங்கி இருக்கிறார். இந்த அடுக்கு மாடி குடியிருப்பை பதிவு செய்வதற்காக நடிகர் ரன்வீர்சிங் முத்திரை கட்டணமாக மட்டும் ரூபாய் 7.13 கோடி செலுத்தியுள்ளார். மும்பையில் அண்மையில் பத்திரபதிவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |