Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்…. ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

ரயில்களில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரயில்வே நிர்வாகம் ரயில்வே துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கு முடிவு செய்துள்ளதால், மூத்த குடி மக்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகள் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு நடைபாதை கட்டணங்கள் உயர்த்தப்பட்டது. இந்த கட்டணத்தை குறைப்பதற்கு ரயில்வே சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது ரயில்வே நிர்வாகம் அதிரடியாக மற்றொரு முடிவையும் எடுத்துள்ளது. அதாவது அதிக தூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் 10 முதல் 13 தூங்கும் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். அதோடு 864 முதல் 936 படுக்கைகளும் இருக்கும்.

இந்த பெட்டியில் தான் பெரும்பாலான மக்கள் பயணம் செய்ய விரும்புவார்கள். இந்த பெட்டியில் கட்டணமும் குறைவாக இருக்கும். இந்நிலையில் ரயில் பெட்டிகளின் தரம் உயர்த்தப்பட்ட பிறகு சோழன் எக்ஸ்பிரஸ் ரயில், முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் மற்றும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் துங்கும்‌ பெட்டிகளின் எண்ணிக்கை 13 இலிருந்து 10 ஆக குறைக்கப்பட்டது. இதனையடுத்து படுக்கைகளின் எண்ணிக்கையும் 780 ஆக குறைக்கப்பட்டது. அதன் பிறகு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால், ரயில்களில் சீட் கிடைக்காமல் பயணிகள் அவதிப்பட்டனர்.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ரயில்வே நிர்வாகம் தற்போது குறிப்பிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் தூங்கும் வசதி கொண்ட 2 பெட்டிகளை மட்டும் குறைப்பதற்கு முடிவு செய்துள்ளது. இதற்கு பதில் ஏசி பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சாதாரண பெட்டிகளை விட ஏசி பெட்டிகளில் ரயில்வே கட்டணம் 3 மடங்கு அதிகமாக இருக்கும். இது போன்ற நடவடிக்கைகளால் ரயில்வே கட்டணத்தை அதிகரிக்காமல், ரயில்வே துறை வருமானத்தை அதிகரிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |