Categories
மாநில செய்திகள்

மகளிருக்கு இலவச பயண திட்டம்….. இப்படியொரு சிக்கல்….? நடவடிக்கை எடுக்குமா அரசு….!!!!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களில் ஒன்று மகளிருக்கு இலவச பயண திட்டம். இந்த திட்டம் பெண்களுடைய நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. கடந்த ஒரு வருடங்களில் இந்த திட்டத்தின் மூலமாக சுமார் 115 கோடி முறை பெண்கள் இலவச பயணத்தை மேற்கொண்டதாகவும் இதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் பெண்கள் பெரும் பயனடைந்து வருவதாகவும் கூறி வருகின்றனர்.

அதே நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இலவச பயணம் செய்யும் பெண்களை போக்குவரத்து ஊழியர்கள் அவமரியாதையுடன் நடத்தும் வீடியோக்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதன் பிறகு போக்குவரத்து துறை சார்பில் குறிப்பிட்ட பேருந்து நடத்துநர், ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இதுபோன்ற செயல்பாடுகள் குறைந்தபாடில்லை.

இது ஒருபுறம் இருக்க நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களை எங்கு செல்ல வேண்டும் என்று கேட்காமலேயே நடத்துனர்கள் பயண சீட்டு வழங்குவதாகவும், படிப்பறிவு இல்லாத பெண்கள் பேருந்து மாறி ஏறி பயணம் செய்வதும் அவர்கள் பாதியிலேயே வழியில் இறக்கி விடும் நிலைக்கு ஆளாகி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இது குறித்து நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இல்லாவிட்டால் இலவச பயணத்த திட்டத்தை சிறப்பாக செய்து வரும் தமிழக அரசு நகரப் பேருந்துகளில் வழித்தடங்கள் குறித்து அறிவிப்பு ஒலிப்பான்களை பொருத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |