நாட்டில் தகுதியற்ற விவசாயிகளுக்கு பிஎம்கிசான் திட்டத்தின் கீழ் ஒரு ரூபாய் கூட பணம் கிடைக்காது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்தியாவிலுள்ள நடித்த விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் மூன்று தவணைகளாக 6 ஆயிரம் ரூபாய் மத்திய அரசு தரப்பில் வழங்கப்படுகிறது. இந்த பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.
அடுத்து 12 ஆவது தவணைபணம் எப்போது வரும் என்ற விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். ஆனால் பணம் வரும் தேதி தொடர்பான அறிவிப்பு எதுவும் அரசிடம் இருந்து தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில் வருமான வரி செலுத்துபவர்கள் இந்த திட்டத்தின் கீழ் இணைந்தே நிதி உதவி பெறுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்துள்ளது. அதனைப் போலவே கணவன் மனைவி இருவருமே நிதி உதவி பெறுவதாக புகார் எழுந்துள்ளது. அரசின் விதிமுறையின் படி இது தவறானது.
இது போன்ற தவறான முறையில் நிதி உதவி பெறுபவர்களை கண்டுபிடித்து அவர்களை திட்டத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பயிரிடக்கூடிய நிலங்களை தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெற முடியும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்தில் பயலும் பெற விண்ணப்பிக்கலாம்.
ஆனால் அனைத்து விவசாய குடும்பங்களுக்கும் இந்த திட்டத்தின் நிதி உதவி எளிதில் கிடைத்து விடாது. அதற்கு அரசு சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அதாவது நிறுவன விவசாயிகள், மாநிலம் மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள்,பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உழவர் குடும்பங்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், ஓய்வு பெற்றவர்கள்,மாதத்திற்கு பத்தாயிரம் ரூபாய்க்கு அதிகமான ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆகியோர் இந்த நிதி உதவி பெறுவதற்கு விண்ணப்பிக்க இயலாது.
அதனைப் போலவே முந்தைய ஆண்டில் வருமான வரி செலுத்தியவர்கள் இந்த திட்டத்தில் இணைய முடியாது. இந்த திட்டம் நடுந்த விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்திலே கொண்டுவரப்பட்டது. ஆனால் நல்ல வசதி படைத்தவர்களும் அரசு வேலை பார்ப்பவர்களும் இந்த திட்டத்தின் கீழ் இணைந்து நிதியுதவி பெற்று வருவது தெரியவந்துள்ளது. அதனால் தகுதியற்றவர்களை இந்த திட்டத்தில் இருந்து நீக்கவும் அவர்கள் பெற்ற நிதி உதவியை திரும்ப வசூலிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தகுதியற்றவர்களின் பெயர் திட்டத்துக்கான பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வருகிறது.