விபத்தில் மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஆரோக்கிய செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஆரோக்கிய செல்வராஜ் குத்தாலம் மின்வாரியத்தில் தற்காலிகமாக பணிபுரியும் அபி என்பவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் ஒ.என்.ஜி.சி. பிளான்ட் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வேன் திடீரென நிலை தடுமாறி இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஆரோக்கிய செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
மேலும் காயமடைந்த அபியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் இருந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆரோக்கிய செல்வராஜின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.