அ.தி.மு.க கட்சியின் புதிய பொருளாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க கட்சியின் பொதுகுழு கூட்டம் சென்னையில் உள்ள தனியார் மண்டபத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தின் போது அ.தி.மு.கவில் இரட்டை தலைமை ரத்து செய்யப்பட்டு பொதுச்செயலாளர் பதவியானது கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் பிறகு பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரையில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
அதோடு பன்னீர்செல்வம் கட்சியின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக அவரை கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கியதோடு, அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி ஓ.பி.எஸ் ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். இந்நிலையில் ஓ.பி.எஸ் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால், எடப்பாடி பழனிச்சாமி புதிய பொருளாளரை நியமித்துள்ளார். அதன்படி திண்டுக்கல் சீனிவாசன் அ.தி.மு.க கட்சியின் பொருளாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.