இந்தியாவில் ஒமிக்ரான் மற்றும் அதன் துணை வைரஸ்களால் தூண்டப்பட்டுள்ள கொரோனா தொற்று பரவி வருகிறது. ஒமிக்ரான் வைரசின் துணை வைரஸ்களில் ஒன்றான பிஏ.2.38 பரவல் இந்தியாவில் இருக்கிறது. இவ்வைரசால் ஆபத்தா?..இது பாதிப்பை ஏற்படுத்துமா?.. என்பது தொடர்பாக மத்திய அரசின் அமைப்பான இன்சாகாக் என்ற இந்திய சார்ஸ்கோவ் 2 மரபணு வரிசைப்படுத்தல் கூட்டமைப்பு விளக்கமளித்துள்ளது. அதாவது, பிஏ.2. வைரஸ், பிஏ.2.38 என மறுவகைப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த வைரஸ் சமீபத்திய வரிசைமுறை தொகுதிகளில் பரவலாகவுள்ள துணை பரம்பரை என்று தெரிகிறது. இதனிடையில் இந்த வைரசால் இதுவரையிலும் ஆஸ்பத்திரி சேர்க்கைகள் அதிகரிக்கவில்லை. அத்துடன் நோய் தீவிரமும் ஏற்படவில்லை. அண்மையில் நேரிட்டுள்ள சிறிய அளவிலான இறப்புகள் கூட இணை நோய்களால் ஏற்பட்டவைதான். கொரோனாகால விதிமுறைகளை கடைப்பிடிப்பது தொற்று பரவலை குறைக்கும். ஆகவே கட்டுப்பாடுகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த வைரசால் ஆபத்து எதுவுமில்லை என்று தெரியவந்துள்ளது.