Categories
மாநில செய்திகள்

பொதுக்குழுவில் பங்கேற்காத ஓபிஎஸ்…. சி.விஜயபாஸ்கர் வரவு செலவு கணக்கு வாசிப்பு….!!!!

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் வானகரத்திலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. இதனால் அ.தி.மு.க வரவுசெலவு கணக்கை முன்னாள் அமைச்சரான சி.விஜய பாஸ்கர் வாசித்தார். அதன்படி அ.தி.மு.க.வின் பெயரில் வங்கிகளில் நிலை வைப்புத்தொகையாக ரூபாய் 244 கோடி இருக்கிறது. 09/01/2021 முதல் 22/06/2022 வரை அ.தி.மு.க.விற்கு ரூபாய் 53 கோடி வரவாக வந்துள்ளது. இக்காலத்தில் ரூபாய் 62 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

முன்பாக இன்று காலையில் அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பொதுக் குழுவைக் கூட்ட பெரும்பான்மையான உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர். அத்துடன் 11ம் தேதி பொதுக் குழுவைக் கூட்ட சென்ற ஜூன் 23ம் தேதியை முறைப்படி அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். அதனடிப்படையில் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தைக்கூட்ட தடையில்லை என தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவை அடுத்து அ.தி.மு.க செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டமானது இன்று காலை 9.15 மணிக்கு வானகரத்திலுள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. முதலாவதாக காலை 9:15 மணிக்கு அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் செயற்குழு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுக்குழுவில் நிறைவேற்றபடவுள்ள 16 தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் இடைக் கால பொதுச்செயலாளராக இ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்டார். அதனைதொடர்ந்து 4மாதங்களில் பொதுக்குழு செயலாளர் தேர்தல் நடைபெறும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Categories

Tech |