பிரபல நடிகை சமந்தா நடிப்பில் இப்போது யசோதா என்ற பான் இந்தியா படம் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தை இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இயக்குகிறார்கள். இந்த படத்தில் வர லட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உட்பட பலர் நடித்துள்ளனர். திரில்லர் வகை கதை அம்சம் கொண்ட இத்திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தன் ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் வாயிலாக தயாரித்து உள்ளார். இப்படத்திற்கு மணிஷர்மா இசையமைத்துள்ளார்.
இதையடுத்து எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்து உள்ளார். மார்த்தாண்டா கே.வெங்கடேஷ் படத்தொகுப்பு செய்து இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வைரலாகியது. இந்த நிலையில் இப்படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதாவது யசோதா படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் இப்படத்தில் 1 பாடலை தவிரத்து மற்ற பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் ஜூலை 15ஆம் தேதி டப்பிங் பணிகள் தொடங்கவுள்ளதாகவும் படக்குழு தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.