அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான திட்டம் தயார் என மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்திற்காக இடம் ஒதுக்குதல், பணிகளை எப்படி செயல்படுத்த போறோம் போன்ற பல்வேறு விஷயங்களை உள்ளடக்கி ஒரு டிராப்ட் தயாரிக்க வேண்டும். பின்னர் தான் அதை செயல்படுத்த வேண்டும் என்பதையொட்டி தான் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.அதன்படியே ராமஜென்ம பூமியில் கோவில் கட்டுவதற்கான டிராப்ட் அமைப்பது , அது தொடர்பான பணிகளை துவக்குவது என இதற்காக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும்.அதே சமயத்தில் இஸ்லாமியர்களுக்கு மசூதியை கட்டுவதற்கு தனியாக இடம் ஒதுக்கி தரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையிலே முக்கிய முடிவுகளை மத்திய அமைச்சரவை கூட்டம் எடுத்துள்ளதாகவும் , ராமர் கோவில் கட்டுவதற்கான திட்டம் தயார் என்றும் , அதற்கான ஸ்ரீ ராம ஜென்மபூமி திரத் ஷோத்ரா என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரம் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அந்த தேர்தலுக்கு முன்பாக இந்த அறிவிப்பு வந்திருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இது குறித்து என்ன கருத்து வர போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். CAA , NRC , NPR போன்ற போராட்டத்தால் பலவிதமான பிரச்சனைகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்டுள்ளது.அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் இந்த பட்ஜெட் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முக்கிய அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.