Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வந்த புகாருக்கு…. சம்மந்தமில்லா சோதனை….. 15 வயது சிறுவன் மீட்பு…. கரும்புக்கடைக்காரர் கைது…!!

திருவள்ளூரில் 15 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்திய குற்றத்திற்காக  கரும்பு கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் மணவாளர் நகர்ப்பகுதிகளில் குழந்தை தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு உள்ளதாக வந்த தகவலை அடுத்து சமூக நலத்துறை அதிகாரிகள் அப்பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள பெரிய ஜவுளிக் கடைகளில் தான் அதிகமான குழந்தைத் தொழிலாளர்கள் அமர்த்தப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்தது.

ஆனால் அங்கெல்லாம் சோதனை மேற்கொள்ளாமல் அப்பகுதியில் உள்ள ஒரு சிறிய கரும்பு ஜூஸ் கடையில் 15 வயது சிறுவன் வேலை பார்த்ததை உறுதி செய்த அதிகாரிகள் சிறுவனை மீட்டு விசாரிக்கையில், தான் விருப்பப்பட்டுதான் இந்த பணியில் சேர்ந்ததாகவும் பத்தாம் வகுப்பு வரை படித்தேன் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு வந்துவிட்டேன் என்று சிறுவன் தெரிவித்தார்.

இதையடுத்து அவரை குழந்தைகள் நல காப்பகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். மேலும் சிறுவனின் குடும்ப சூழ்நிலையை கருதி உதவி செய்யும் நோக்கத்தில் வேலைக்கு சேர்த்ததாக கரும்பு கடை வியாபாரி தெரிவித்தபோதும் அதிகாரிகள் அவரை கைது செய்தனர். ஒரு சிறுவனை மட்டும் மீது சென்ற சமூக நலத்துறையினர் அங்கு பெரிய  கடைகளில்  கஷ்டபட்டு பணிபுரியும் மற்ற தொழிலாளர்களை காப்பாற்றாமல்  சென்றது ஏன் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. 

Categories

Tech |